விழுப்புரத்தில் இன்று (செப்.23) அம்மா நகரும் ரேஷன் கடையை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு நேரடி வங்கிக் கடன் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.வி. சண்முகத்திடம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்தும், இதுவரை அவரது மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் மந்த நிலையில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், "ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையம் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது இன்றோ அல்லது நாளையோ விசாரணைக்கு வர உள்ளது" என்றார்.
இதையும் படிங்க...மதுரை அருகே கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு!