விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வல்லம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை (டிச. 14) 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் யுவராஜ் தலைமையில் எட்டு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுமார் 5 மணி நேரம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கணக்கில் வராத 73 ஆயிரம் ரூபாய், ஆவணங்களைப் பறிமுதல்செய்தனர். இதையடுத்து, சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பத்திரப் பதிவர்கள் ஆகியோரிடம் ஆவணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அமாவாசை தினமான நேற்று ஏராளமான பத்திரப்பதிவு நடைபெறவுள்ளதால், முறைகேடான பண பரிவர்த்தனை நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்றதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இச்சோதனையால் வல்லம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய அரசு அலுவலக ஊழியர்... கையும் களவுமாக கைது!