விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி தலைமை தாங்கினார்.
மேலும் அவர், திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.