ETV Bharat / state

மாமன்னன் ‘ரத்னவேலாக மாறினாரா பொன்முடி? நடந்தது என்ன? - அமைச்சர் பொன்முடி

Minister Ponmudi Controversy: திமுகவின் ஆதிதிராவிடர் நலப் பிரிவு மாநில இணைச் செயலார் உள்ளிட்ட சிலரை , நிற்க வைத்து பேசியதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அமைச்சர் வீட்டில் தங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டதாக முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 4:44 PM IST

விழுப்புரம்: கலைஞர் அறிவாலயத்தில் வருகிற அக்.1ஆம் தேதி நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில ஆதிதிராவிடர் நல அணி, சிறுபான்மையினர் அணி இணைந்து விழுப்புரம் மத்திய மண்டலம் சார்பில் திண்டுக்கல் லியோனி இன் பட்டிமன்றம் நடத்தவுள்ளனர்.

பட்டிமன்றம் குறித்த ஆலோசனைகளைப் பெறுவதற்காக ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர்கள் வி.பி.ராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட விழுப்புரம் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.

அப்போது, அமைச்சர் பொன்முடி அமர்ந்தவாறும் வந்தவர்களை நிற்கவைத்தும் பேசியதாக புகைப்படம் ஒன்று நேற்றைய தினம் வெளியானது. இதனைக் கண்ட நெட்டிசன்கள், “இருக்கை காலியாக இருந்தும் அவர்களை அமர வைக்காதது ஏன்? 'மாமன்னன்' பட பாணியிலான அடக்கமுறையா இது” என கேள்வி எழுப்பினர்.

இது குறித்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் புஷ்பராஜ் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், "கடந்த 26ஆம் தேதி நானும், வி.பி.ராஜனும் அமைச்சர் பொன்முடியை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றோம். அப்போது, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கட்டுப் போட்டு அமர்ந்திருந்தார். அதை வி.பி.ராஜன் குனிந்து நலம் விசாரித்தபோது எடுக்கப்பட்ட படமாகும்.

எங்களுக்கு அமைச்சர் வீட்டில் உரிய மரியாதை கொடுத்தார்கள் பின்னர் உணவருந்திவிட்டுதான் வந்தோம். சில விஷயங்களில் உண்மை என்ன வென்று தெரிந்துகொள்ளாமல் பொது வெளியில் சொல்வது தவறானது என்று கருதுகின்றேன். இதற்கு மேல் என்னிடம் விளக்கம் கேட்கவேண்டாம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.