ETV Bharat / state

அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத் திணறல்; மருத்துவமனையில் அனுமதி! - அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை

விழுப்புரம்: திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

agri minister duraikannu admitted in hopital
அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல்; மருத்துவமனையில் அனுமதி
author img

By

Published : Oct 13, 2020, 11:56 AM IST

தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சராக இருந்து வருபவர் துரைக்கண்ணு. இவர் இன்று காலை சென்னையில் இருந்து சேலத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் உடனடியாக விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். லேசான மூச்சுத் திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பிற்பகலில் அவர் வீடு திரும்புவார் என மாவட்ட சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு ஆளுநர் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.