விழுப்புரம்: பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர் நிலைப் பள்ளியில், கரோனா ஊரடங்கிற்குப் பிறகு 2 ஆண்டுகள் கழித்து, இன்று 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறந்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த கன மழையால் பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
இதனால் மாணவ- மாணவிகள் வகுப்பறைக்குள் செல்ல வேண்டுமெனில், இந்த மழைநீரை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது.
அச்சத்தில் பெற்றோர்
தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ள சூழலில் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப அவர்களின் பெற்றோர் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை மின்மோட்டார் மூலம் உடனடியாக வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதையும் படிங்க: கனமழை: கல்வி நிலையங்களுக்கு விடுமுறை