விழுப்புரம்: வேடம்பட்டு கிராமத்தில் மத்திய சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சிறை தண்டனை அனுபவித்து வருவதால் காவல் துறையினர் மிகுந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வி.புதூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞர் விழுப்புரம் மத்திய சிறைச்சாலை முன்வளாகத்தில் ரவுடிசத்தை ஊக்குவிக்கும் விதமாக டிக்டாக் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய சிறைச்சாலை வாயிலில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இளைஞர் ஒருவர் காலரை தூக்கி விட்டு டிக்டாக் செய்த இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த இளைஞர் அடிதடி செய்வது போலவும், ரௌடிசத்தில் ஈடுபடுவது போலவும் நடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சிறைச்சாலை முன்பு இளைஞர் தனது வாழ்க்கையில் ரவுடி ஆவதே லட்சியம் என டிக்டாக் செய்துள்ளார். அவரை விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: குழந்தையை நாய் கடிக்க முயன்றதில் ஏற்பட்ட தகராறு.. இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணை