ETV Bharat / state

காருக்குள் மண்டை ஓடு.. ஏலம் எடுக்கச்சென்றவர்கள் அதிர்ச்சி! - மரக்காணத்தில் ஏலம்

மரக்காணம் காவல் நிலையத்தில் காரில் மண்டை ஓடு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 9, 2022, 7:56 PM IST

விழுப்புரம்: கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில் கடந்த ஒரு ஆண்டாக நடத்தப்பட்ட மதுவிலக்கு சோதனையில் வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்த ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் அனைத்தும் மரக்காணம் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் இன்று (நவ.9) ஏலம் விடப்படும் என்று முன்னரே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்தொடர்ச்சியாக கோவை, சென்னை, புதுச்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்காக முன்பணம் கட்டி இருந்தனர்.

திட்டமிட்டபடி இன்று காலை காவல்துறை உயர் அலுவலர்களின் முன்னிலையில் ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்தில் 24 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 28 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அப்போது ஒரு கார் ஏலத்திற்கு வந்தது. அந்த காரின் பின் கதவை திறந்து பார்த்தபோது, பிளாஸ்டிக் வாளி ஒன்றில் மண்டை ஓடு இருந்ததைக் கண்டு ஏலத்திற்கு வந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த தகவல் காட்டுத்தீப் போல பிறப் பகுதிகளுக்கும் பரவிய நிலையில், ஏராளமானோர் அதைக் காணக் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் அங்கு விரைந்து வந்து மண்டை ஓட்டினை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த மண்டை ஓடு காருக்குள் எப்படி வந்தது. இதனை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

காருக்குள் மண்டை ஓடு! மரக்காணத்தில் ஏலம் எடுக்க சென்றவர்கள் அதிர்ச்சி..

நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மரக்காணம் காப்புக்காடு பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரின் மண்டை ஓட்டினை விசாரணைக்கு போலீசார் எடுத்துச் சென்று விட்டு மறந்து காரிலேயே வைத்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இவ்வாறு காரில் மண்டையோடு கண்டறிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில் இரவு நேர கடைகளை அனுமதித்தால் பிரச்னை - நீதிபதிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.