விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் மாரியம்மன் கோயில் அருகே சாலையோரம் கிடந்த சாக்குப்பை ஒன்றிலிருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. இதையறிந்த அப்பகுதி மக்கள் அந்தப் பையை எடுத்துப் பார்த்தபோது அதில் பிறந்து சில தினங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்தது தெரியவந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் குழந்தையை மீட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.