விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம், நல்லாபாளையம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் வசித்துவருபவர் அய்யனார். விபத்தில் அடிபட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், இவருடைய மனைவி மற்றும் தாயார் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கண்டாச்சிபுரம் காவல் துறையினர் நேற்று அவர்களை முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
எழுந்து நடக்க முடியாமல், ஒருவரின் பராமரிப்பின் கீழ் இருந்த அய்யனாரை கவனிக்க யாரும் இல்லாத காரணத்தினால் அய்யனார் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து இறந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய யாருமின்றி, ஐந்தாம் வகுப்பு படித்துவந்த அவரது மகன் ஜீவா தனிமையில் நிற்கிறார். காவல் துறையினர், மருத்துவ அலுவலர்களின் செயல்களால்தான் அய்யனார் இறந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கிலும் டியூஷன்... போலீஸை மாஸ்டர் வீட்டிற்கே அழைத்துச் சென்ற சிறுவன்!