ETV Bharat / state

அதிக வேகத்தில் சென்ற கல்லூரி பேருந்துகளால் 5 வயது சிறுவன் பரிதாப பலி - ifet college

விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்தான்.

அதிக வேகத்தில் சென்ற கல்லூரி பேருந்துகளால் 5 வயது சிறுவன் பரிதாப பலி

author img

By

Published : Jun 14, 2022, 1:08 PM IST

விழுப்புரம்: பண்ருட்டி என்.எல்.புரத்தை சேர்ந்த ரஜினிகாந்த்(36) என்பவர் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக மகன் கவிசர்மாவுடன் இரு சக்கர வாகனத்தில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வாணியம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது. IFET கல்லூரிக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு அதி வேகத்தில் எதிரே வந்து கொண்டிருந்தன.
அப்போது எதிர்பாராத விதமாக முதலாவதாக வந்த தனியார் கல்லுாரி பேருந்து ரஜினிகாந்தின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைகுலைந்த ரஜினி, கவிசர்மா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காயமடைந்த இருவரையும் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை கவிசர்மா(5) உயிரிழந்தார்.

அதிக வேகத்தில் சென்ற கல்லூரி பேருந்துகளால் 5 வயது சிறுவன் பரிதாப பலி

விபத்து ஏற்படுத்திய தனியார் கல்லுாரி பேருந்துகள் அங்கிருந்து இயக்க முயன்றதை கண்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்து, பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர். தரமற்ற சாலைகள், அதிவேகமாக செல்லும் கல்லூரி மற்றும் வழித்தட பேருந்துகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதை கண்டித்து சென்னை-கும்பகோணம் சாலையில் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சென்ற வளவனூர் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். விபத்து குறித்து வளவனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: போலி வாக்காளர் அட்டை அச்சிட்ட கணினி மையத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.