விழுப்புரம் மாவட்டம் மதுவிலக்கு சிறப்பு பிரிவு ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான காவல் துறையினர் இன்று பனையபுரம் பகுதியில் சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியில் சந்தேகத்திற்கிடமாக அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனைக்காக நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார்.
தொடர்ந்து வாகனத்தில் நடத்திய சோதனையில் எவ்வித முன் அனுமதியோ, உரிமமோ இன்றி 70 பெட்டிகளில் 3,360 மதுபான பெட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாகன ஓட்டுநரை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் 5 லிட்டர் பீர் கேன் அறிமுகம்: மதுப்பிரியர்கள் உற்சாகம்!