ETV Bharat / state

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் மூவர் பலி! - road accident

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே மலைப்பாதையில் இருந்து சரக்கு வாகனம் கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் மூன்று பேர் பலியான சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விபத்தில் மூவர் பலி
author img

By

Published : May 16, 2019, 12:56 PM IST

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே எருக்கம்பட்டு கிராமத்தில் நடந்த இறப்பு நிகழ்ச்சிகாக, சேலம் மாவட்டம் பெத்தநயாக்கன்பாளையம் பகுதியில் இருந்து மினி டெம்போ மூலம் 20-க்கும் மேற்பட்டோர் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். மலைப்பாதையில் வந்து கொண்டிருக்கும்போது மட்டப்பட்டு தரைபாலம் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் கீழ் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் ஆண்டி, சடையாச்சி தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 15 க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில், அங்கிருந்து ஆறு பேர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதி

அப்போது, செல்லும் வழியிலே ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற கரியலூர் காவல் நிலையத்தினர், ஓட்டுநர் செல்வம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாரா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:TN_VPM_01_16_KALVARAYAN_HILLS_ACCIDENT_3_DEATH_SCRIPT_TN10026

Body:TN_VPM_01_16_KALVARAYAN_HILLS_ACCIDENT_3_DEATH_SCRIPT_TN10026

Conclusion:சாலை விபத்தில் மூவர் பலி ! துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது சோகம் !!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலை பகுதியில் உள்ள எருக்கம்பட்டு கிராமத்தில் துக்க நிகழச்சிகாக சேலம் மாவட்டம் பெத்தநயாக்கன்பாளையம் பகுதியில் இருந்து மினி டெம்போ மூலம் 20க்கும் மேற்பட்டோர் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர் அப்போது வாகனம் மலைப்பாதையில் வந்து கொண்டிருக்கும்போது மட்டப்பட்டு தரைபாலம் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் கீழ் உருண்டு விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ஆண்டி மற்றும் சடையாச்சி ஆகிய இருவர்(கணவன் மனைவி )உயிரிழந்தனர் 15 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர் உடனடியாக அப்பகுதி மக்கள் 108 க்கு அழைத்து கூறியுள்ளனர்.அப்போது அவசரத்திற்கு கள்ளக்குறிச்சியில் இருந்து 45 கிமீ கடந்து சென்று காயமடைந்தவர்கள் மீது 4 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகைச்சக்காக அனுமதித்தனர். இந்தநிலையில் அங்கிருந்து 6 பேர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்தநிலையில் செல்லும் வழியிலே ஒருவர் உயிரிழந்தார் இதனால் விபத்து எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற கரியலூர் போலீசார் ஓட்டுநர் செல்வம் மது அருந்தி வாகனம் ஓட்டினாரா என வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.