உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள், ரமலான் மாத இறுதிநாளில் பிறை தெரிந்த பின்பு நோன்பை முடித்துக்கொள்வார்கள். பிறை தென்பட்ட மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். அவ்வகையில் நடப்பு ஆண்டுக்கான ரமலான் மாத நோன்பு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் ரமலான் தினம் கொண்டாட படுகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் மைதானாத்தில் சிறப்பு தொழுகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். மழை வேண்டியும் ,நாடு தண்ணீர் பஞ்சத்தில் இருந்து விடுபட வேண்டியும் ,உலகம் அமைதி பெற வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றது .சிறப்பு தொழுகை முடிந்தவவுடன் அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் அதிகாலை முதல் சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.