கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்விதமாக நாடு முழுவதும் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு அரசு தடைவிதித்துள்ளது.
அந்த வகையில், விழுப்புரத்தில் உள்ள மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏற்கனவே திருமணம்செய்ய பதிவுசெய்திருந்த 16 இணையரின் திருமணங்கள் மிகுந்த கட்டுப்பாடுடனும், எளிய முறையிலும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் மணமகன், மணமகள் தரப்பில் தலா ஐந்து பேர் என மொத்தம் 10 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் எனவும், பிரகார பகுதிகளுக்கு யாரும் செல்லக் கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: சுயநலமின்றி சேவையாற்றுபவர்களுக்கு கரவோசை எழுப்பும் மக்கள்