சென்னையில் இருந்து தனியார் சொகுசு பேருந்தில் கேரளாவைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவர் பயணிகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி வந்துள்ளார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 5 பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து சக வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதில் 7 பேர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்டோவை தர தரவென சாலையில் இழுத்துச் சென்ற மினி லாரி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி!