ETV Bharat / state

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை - 12th student suicide

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் மனமுடைந்த 12ஆம் வகுப்பு மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide
author img

By

Published : Aug 23, 2019, 9:39 PM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் - பெரியம்மாள் தம்பதியருக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகிய நிலையில், இளைய மகள் சரண்யா அருகிலுள்ள பெருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தேவேந்திரன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், பெரியம்மாள் தனது மூன்று பிள்ளைகளையும் கவனித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய சரண்யா, வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சரண்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தற்போது, சரண்யாவின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வரஞ்சரம் காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து சரண்யாவின் அம்மா பெரியம்மாளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், பெரியம்மாள் தனது மகள் வயிற்றுவலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், படிக்கும் வயதிலேயே சரண்யாவிற்கு திருமணம் நடத்திவைக்க இருந்ததால் மனமுடைந்த சரண்யா, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:tn_vpm_12th_student_girl_sucidie_photo_tn10026Body:tn_vpm_12th_student_girl_sucidie_photo_tn10026Conclusion: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை.



விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ளது சிறுமங்கலம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் பெரியம்மாள் என்கின்ற தம்பதியர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை இருந்து வருகின்றனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இளைய மகள் சரண்யா அருகிலுள்ள பெருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். தேவேந்திரன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், பெரியம்மாள் தனது மூன்று பிள்ளைகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் சரண்யா நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய அவர். வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அவரது குடும்பத்தார் உடனடியாக அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சரண்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறி விட்டனர்.இதன்பிறகு சரண்யாவின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை பிணவறையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சரண்யாவின் தாய் பெரியம்மாள் வரஞ்சரம் காவல் நிலையத்தில் தனது மகள் வயிற்றுவலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக புகார் கூறியுள்ளார். ஆனால் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சரண்யாவின் சகோதரர் வேல்முருகன் என்பவர் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், இதற்கிடையில் தனது தங்கை சரண்யாவுக்கு திருமணத்தை முடித்துவிடலாம் எண்ணிய அவர். தனது குடும்பத்தாருடன் பேசி சரண்யாவிற்கு மாப்பிள்ளை தேடியுள்ளதாக கூறப்படுகிறது. படிக்கும் வயதிலேயே குடும்பத்தினர் திருமணம் நடத்திவைக்க இருப்பதால் மனமுடைந்து காணப்பட்ட சரண்யா நேற்று மாலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் தாய் பெரியம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வரஞ்சரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.