ETV Bharat / state

விக்கிரவாண்டி அருகே கி.பி. 12ஆம் நூற்றாண்டு கால மூத்ததேவி சிலை கண்டெடுப்பு - விழுப்புரம்

விக்கிரவாண்டி அருகே கி.பி. 12ஆம் நுாற்றாண்டை சேர்ந்த வரலாற்று சிறப்புமிக்க மூத்ததேவி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

12ஆம் நூற்றாண்டு சிலை கண்டெடுப்பு
12ஆம் நூற்றாண்டு சிலை கண்டெடுப்பு
author img

By

Published : Jan 23, 2023, 11:37 AM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தில் பாடலீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் போன்ற தமிழர்களின் வாழ்வியலை பறைசாற்றும் கோயில்கள் உள்ளன. இந்த கிராமத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று (ஜன 22) கி.பி. 12ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த மூத்ததேவி சிலை அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் செங்குட்டுவன் கூறியதாவது, “பிரம்மதேசம் கிராமம் மந்தைவெளி பகுதியில் தொடர் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

எங்கள் ஆய்வின்போது மண்ணில் முக்கால்வாசி அளவிற்கு புதைந்திருந்த சிலை ஒன்று கண்டறியப்பட்டது. இச்சிலையை துர்கை என ஊர் பொதுமக்கள் வணங்கி வருகின்றனர். கிராம மக்களின் ஒத்துழைப்புடன் சிற்பத்தில் இருந்த மண்ணை அகற்றி சிலையை எடுத்தோம். அதன் உருவம் மட்டும் வடிவமைப்பை ஆய்வு செய்த போது அது பழமை வாய்ந்த மூத்ததேவி சிலை என தெரிய வந்தது.

இந்த சிலையின் காலம் கி.பி.12 - 13ஆம் நுாற்றாண்டு என்று மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் உறுதிப்படுத்தியுள்ளார். சங்க காலம் தொடங்கி சோழர்காலம் வரையிலும் ஜேஷ் டா எனும் மூத்ததேவி வழிபாடு முறை தமிழர்களின் மிகவும் தொன்மையான வழிபாடு முறையாகும். இந்த சிலையினை பொதுமக்கள் முறையாக பாதுகாக்க வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: மின்னொளியில் ஜொலிக்கும் பழனி முருகன் கோயில் வளாகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.