விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே திருக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தேவநாதன், கோதண்டம், ரவி. இவர்கள் மூவரும் வனப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளனர். அப்போது, அங்கு தென்பட்ட காட்டுப்பன்றியை அடித்துக்கொன்று கறியை பங்கிட்டுக் கொண்டிருந்தனர்
அவ்வழியே ரோந்துப் பணியில் இருந்த திண்டிவனம் வனச்சரக அலுவலர் தர்மலிங்கம் தலைமையிலான குழுவினர் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து கைதுசெய்தனர்.
இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.