சென்னை பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 2 மணியளவில் 36 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. அப்போது கோவையிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்லும் சாலையில் இரு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த உமர் என்பவர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த வழக்கு: நில உரிமையாளருக்குப் பிணை!