வேலூர்: குடியாத்தம் புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (22). இவர் தனியார் கேபிள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு டிக் டாக் ரீல் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இதனிடையே நேற்று (மே.3) குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூர் ரயில்வே நிலையம் அருகே நண்பர்களுடன் சென்ற அவர், அங்கே ரயில்வே தண்டவாளத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஓடும் ரயில் முன் இன்ஸ்டா ரீல்...! உடல் சிதறி பலியான 3 மாணவர்கள்...