வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன். பொறியியல் பட்டதாரியான இவர் ஆற்காடு அருகே சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் பக்காவாட்டில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
அவரை மீட்க ஆற்காடு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரமாக போராடினர். மீட்க முற்பட்டால் தான் குதித்து விடுவேன் எனவும் பெட்ரோல், மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிப்பேன் எனவும் மிரட்டல் விடுத்தார் அந்த நபர். பின்னர் டவர் மீது ஏறிய மதனின் நண்பர்கள் வந்து பேச்சுவார்தை நடத்தியதையடுத்து அவர் கீழே இறங்கி வந்தார்.
காவல் துறை விசாரணையில் இவர் சில நாட்களுக்கு முன் வேலைக்காக நேர்காணல் சென்றதாகவும், அங்கு அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: வைகை ஆற்றில் அடித்துச்சென்ற இளைஞர் - வைரலான வீடியோ