வேலூர்: பேர்ணாம்பட்டு தாலுகா, மேல்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி ரேவதி - தரணி. இருவேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.கடந்த ஆண்டு தரணி உயிரிழந்தார்.
இந்நிலையில், தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தரணி குடும்பத்தார் வீட்டில் சேர்க்கவில்லை என்றும், தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தனது கணவரின் பி.எஃப் பணம் 23 லட்சத்தை தரணி வீட்டார் போலி வாரிசு சான்றிதழை வைத்து பெற்றுக்கொண்டதாக கூறி இன்று (அக் 25) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் ரேவதி தர்ணாவில் ஈடுபட்டார்.
பின்னர் இது தொடர்பாக ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதுகலை நீட் கவுன்சிலிங் நிறுத்திவைப்பு