ETV Bharat / state

ஓய்வூதியத்தை இழுத்தடித்த அரசு; முதலமைச்சர் காலில் விழுந்து கதறிய பெண்

வேலூர்: திருப்பதி சென்றுவிட்டு திரும்பிய முதலமைச்சரை வரவேற்கும் நிகழ்ச்சியில், மனு அளிக்க வந்த பெண், உயிரிழந்த தனது கணவரின் ஓய்வூதியத்தை வழங்கக் கோரி முதலமைச்சரின் காலில் விழுந்து கதறியுள்ளார்.

முதலமைச்சரின் காலில் விழுந்து பெண்
முதலமைச்சரின் காலில் விழுந்து பெண்
author img

By

Published : Feb 1, 2020, 5:52 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி சென்றுவிட்டு அங்கிருந்து காட்பாடி, வேலூர் வழியாகச் சேலம் சென்றார். அப்போது வேலூர் காட்பாடி செங்குட்டையில் அமைச்சர் கே.சி. வீரமணி, அதிமுக எம்எல்ஏக்கள் ரவி, லோகநாதன், பார்த்திபன் தலைமையில் அரசு அலுவலர்கள் சார்பில் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது சத்துவாச்சாரியைச் சேர்ந்த அனிதா என்ற பெண், தனது மகன், மகளுடன் வந்து முதலமைச்சரிடம் மனு அளித்தனர். பின்பு, அனிதா முதலமைச்சரின் காலில் விழுந்து கண்ணீர் மல்கக் கதறியுள்ளார்.

சில நொடிகள் முதலமைச்சரின் காலை பிடித்தபடியே இருந்த அனிதாவை எழுப்பி, ‘உனக்கு என்னம்மா பிரச்னை’ என்று முதலமைச்சர் கேட்ட நிலையில், “தனது கணவர் சக்திவேல் வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அன்று முதல் எனது பிள்ளைகளுடன் மிகுந்த சிரமத்தில் வாழ்ந்து வருகிறேன். எனக்கான ஓய்வூதியம் இன்னும் வழங்கப்படவில்லை, ஓய்வூதியத்தை விரைவில் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அமைச்சரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்தார்.

முதலமைச்சரின் காலில் விழுந்து பெண் அழுகை

இதையும் படிங்க: விவசாய நிலங்களை சேதப்படுத்திய வனத்துறையினர், தரையில் விழுந்து கதறிய மக்கள்!

Intro:வேலூர் மாவட்டம்

ஓய்வூதியம் வழங்க கோரி முதல்வரின் காலில் விழுந்து கதறிய பெண் Body:தமிழக முதல்வர் எடப்பாடி திருப்பதியில் இருந்து காட்பாடி, வேலூர் வழியாக சேலம் சென்றார். அப்போது வேலூர் காட்பாடி செங்குட்டையில் அமைச்சர் கே.சி.வீரமணி, அதிமுக எம்.எல்.ஏக்கள் ரவி, லோகநாதன் மற்றும் DRO பார்த்திபன் தலைமையில் அரசு அதிகாரிகள் சார்பில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது சத்துவாச்சாரியை சேர்ந்த அனிதா என்ற பெண் தனது மகன், மகளுடன் வந்து முதல்வரின் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். சில நிமிடம் காலை பிடித்தபடி இருந்தார். அதிர்ச்சி அடைந்த முதல்வர், என்னம்மா பிரச்னை என்று கேட்டபோது, தனது கணவர் சக்திவேல் வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைத்தில் உதவி ஆய்வாளராக இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும். அன்று முதல் தான் எனது பிள்ளைகளுடன் மிகுந்த கஷ்டப்பட்டு வருவதாகவும். ஆகவே எனக்கான ஓய்வூதியம் இன்னும் வழங்கப்பட்டவில்லை, ஓய்வூதியத்தை விரைவில் வழங்க கோரி மனு அளித்தார். இதையடுத்து அமைச்சரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.