திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கோடியூர் சமத்சாய்பு தெருவைச் சேர்ந்த குருமூர்த்தியும், அவரது மனைவி மலரும் பல ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்திவந்தனர்.
இந்நிலையில், இந்தாண்டு தீபாவளிக்குச் சீட்டு கட்டியவர்களுக்கு தீபாவளிக்கு பட்டாசு பாக்ஸ் தவிர பணம் கட்டியதற்கான எந்தப் பொருட்களையும் அவர்கள் வழங்கவில்லை. இதுகுறித்து பணம் கட்டியவர்கள் மலரிடம் பலமுறை கேட்டும் எந்தப் பதிலும் அளிக்கமால் அலட்சியமாக அவர் இருந்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நேற்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில், “ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த தாங்கள் மலர் நடத்திய தீபாவளி சீட்டில் மாதம் 200 ரூபாய் வீதம் 12 மாதங்கள் கட்டினோம். இதனால் 40 கிராம் வெள்ளி, 2 கிராம் தங்க காசு, பட்டாசு பாக்ஸ் ஆகியவை வழங்கப்படும். இதேபோன்று ஆயிரம் ரூபாய் கட்டினாலும் 40 கிராம் வெள்ளி, 4 கிராம் தங்க காசு, பட்டாசு பாக்ஸ் ஆகியவை வழங்கப்படும்.
இதனை நம்பி நாங்களும் கட்டினோம். ஆனால் 12 மாதங்கள் முடிந்ததும், கடந்த தீபாவளியன்று பட்டாசு பாக்ஸ் மட்டுமே எங்களுக்கு கிடைத்தது. வெள்ளி, தங்க காசு வழங்கவில்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க...ஆசைவார்த்தைக் கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!