ETV Bharat / state

திருமணத்தைத் தாண்டிய உறவில் கணவன் கொலை - மனைவியும் அவரது நண்பரும் கைது! - கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தத கணவனை மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை

வேலூர்:  திருமணத்தைத் தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடியது அம்பலமாகியதால் கொலை செய்த மனைவி, மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

vellore
author img

By

Published : Oct 1, 2019, 10:09 PM IST

வேலூர், காட்பாடி பாரதி நகரைச் சேர்ந்தவர் சரவணன்(50), இவரது மனைவி பவானி(41). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மதுப்பழக்கத்துக்கு அடிமையான சரவணன், குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 2ஆம் தேதி சரவணன் வீட்டில் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் அவரது மனைவியிடம் விசாரிக்கையில், மது அருந்த பணம் தராததால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். இந்நிலையில், இன்று சரவணனின் உடற்கூறு ஆய்வில் அவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை அறிந்த காவல்துறையினர் பவானியைப் பிடித்து விசாரிக்கையில்,பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், பவானி காட்பாடியைச் சேர்ந்த வேலாயுதம்(35) என்பவருடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்துள்ளார். இதையறிந்த சரவணன் மனைவியை அடிக்கடி குடித்துவிட்டு கண்டித்துள்ளார்.

பவானியிடம் காவல்துறையினர் விசாரித்த போது!

இதனால் ஆத்திரமடைந்த வேலாயுதம், பவானியின் உதவியுடன் சரவணனை கொல்லத் திட்டமிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, சரவணன் மே 2ஆம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை பயன்படுத்திக்கொண்ட வேலாயுதம், பவானி இருவரும் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தூக்கு மாட்டி இறந்ததாக நாடகமாடியுள்ளனர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து தற்போது பவானி, அவரது நண்பர் வேலாயுதம் ஆகிய இருவரையும் காட்பாடி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:

கள்ளக்காதல் விவகாரம்... ரவுடியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவர்

Intro:வேலூர் மாவட்டம்

காட்பாடியில் சைக்கிள் கடை நிறுவனர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் - கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு நாடகமாடியது அம்பலம் - மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது
Body:வேலூர் மாவட்டம் காட்பாடி பாரதி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பவானி(41). இவர்களுக்கு சவுமியா, மோனிகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் சைக்கிள் ஷாப் நடத்தி வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சரவணன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 2ம் தேதி சரவணன் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது சம்பவ இடத்திற்கு சென்ற கட்பாடி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மது அருந்த பணம் கொடுக்காததால் சரவணன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பவானி தெரிவித்துள்ளார் இருப்பினும் சரவணின் மரணத்தில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் சரவணன் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்தபோது அதில், கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்த்து. இதையடுத்து போலீசார் பவானியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவர் திடுக்கிடும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் பவானி, நான் காட்பாடியை சேர்ந்த வேலாயுதம் (35) என்பவரின் மசாலா கம்பெனியில் வேலையை பார்த்து வருகிறேன் வேலாயுதம் அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து செல்வார் இதனால் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது இதற்கிடையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான எனது கணவர் சரவணன் அடிக்கடி வீட்டில் என்னுடன் தகராறு செய்வார் இதனால் வேலாயுதம் எனது கணவரை கண்டித்தார் பின்னர் சென்னையில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில் அவரை அனுமதித்தோம் மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் வீட்டிற்கு வந்தார் பின்னர் மீண்டும் பழையபடி மது அருந்திவிட்டு தகராறு செய்தார். எனவே எங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் எனது கணவரை கொலை செய்ய முடிவு செய்தோம் சம்பவத்தன்று சரவணன் அதிக மது போதையில் வீட்டிற்கு வந்தார். நானும் வேலாயுதமும் சேர்ந்து பிளாஸ்டிக் வயர் மூலம் சரவணின் கை கால்களை கட்டிப்போட்டு கழுத்தை நெறித்தும் பிளாஸ்டிக் பைப்பால் அடித்தும் கொலை செய்தோம் பின்னர் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் வீட்டில் இருந்த துப்பட்டாவை எடுத்து அவர் தூக்கில் தொங்கியது போல் நாடகமாடினோம்" என்று தெரிவித்தார். இதையடுத்து பவானி மற்றும் அவரது கள்ளக்காதலன் வேலாயுதம் ஆகிய இருவரையும் காட்பாடி போலீசார் இன்று கைது செய்தனர். கள்ளக் காதலுக்காக தாலி கட்டிய கணவனை மனைவியே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.