ETV Bharat / state

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி - கணவர் இறந்த துக்கம் தாங்காமல் உயிர் துறந்த மனைவி - இணை பிரியாத தம்பதி

வேலூர் குடியாத்தம் அருகே கணவர் இறந்த துக்கம் தாக்காமல், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறப்பிலும் இணைபிரியாத அந்த தம்பதியில் உடல்கள் ஒரே பல்லக்கில் வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி
இறப்பிலும் இணை பிரியாத தம்பதி
author img

By

Published : Sep 11, 2022, 10:51 PM IST

வேலூர்: குடியாத்தம் அடுத்த கௌதம்பேட்டை பகுதியில், சேகர் (65)- அஞ்சலி (60) தம்பதியினர் வசித்து வந்தனர். சேகர் கூலித் தொழிலாளியாக இருந்தார். இந்த தம்பதியினர் தங்களது மகன்களுடன் வசித்து வந்தனர். கடந்த சில நாள்களாக சேகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் நேற்று (செப்.10) உயிரிழந்துவிட்டார். அவரது மனைவி அஞ்சலி, கணவர் உடலுக்கு அருகே அமர்ந்து அழுதபடி இருந்துள்ளார். இந்த நிலையில், இன்று (செப்.11) காலை அஞ்சலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, கணவரின் உடலருகே மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அஞ்சலியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து அஞ்சலின் உடலும், அவரது கணவர் சேகரின் உடலுக்கு அருகில் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

இருவரின் உடல்களும் ஒரே பல்லக்கில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டது. கணவரின் பிரிவை தாங்காத மனைவி உயிரிழந்த சம்பவம், அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சாலையைக் கடக்க முயன்ற முதியவர் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.