ETV Bharat / state

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போனால் போகட்டும் - துரைமுருகன்

வேலூர்: திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகிப்போனால் எங்களுக்கு கவலையில்லை, அவர்களுக்கு ஓட்டேயில்லை என திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போனால் போகட்டும் - துரைமுருகன்
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போனால் போகட்டும் - துரைமுருகன்
author img

By

Published : Jan 15, 2020, 6:29 PM IST

வேலூர் மாவட்டம், காட்பாடியில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் ஆண்டுதோறும் திமுக சார்பில் நடைபெறும் தொகுதி மக்கள் சந்திப்பு மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன், தொண்டர்களுக்கு சால்வை அணிவித்து பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார், திமுக நிர்வாகிகள் முகமது சகி, சுனில் உள்பட திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

பின்னர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் அவரிடம் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவது போன்ற பேச்சுகள் எழுகிறதே என கேள்வி எழுப்பினார். இதற்கு துரைமுருகன், காங்கிரஸ் எங்கள் கூட்டணியிலிருந்து விலகிப் போனால் போகட்டும், எங்களுக்கு அதனால் நஷ்டமில்லை. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி சென்றாலும் அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை. அவர்களுக்கு ஓட்டே கிடையாது, இதனால் எங்களுக்கு எந்த பாதிப்புமில்லை என்று தெரிவித்தார்.

Intro:Body:திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகிப்போனாலும் போகட்டும் அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை அவர்களுக்கு ஓட்டேயில்லை - திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சிதுணைதலைவருமான துரைமுருகன் காட்பாடியில் பேட்டி

வேலூர் மாவட்டம்,காட்பாடியில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் ஆண்டுதோறும் நடைபெறும் தொகுதி மக்கள் சந்திப்பு மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி காட்பாடியில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைதலைவருமான துரைமுருகன் பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கு சால்வை அணிவித்து பொதுமக்களிடம் புகைப்படம் எடுத்துகொண்டார் இந்த விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் முகமது சகி மற்றும் சுனில் உள்ளிட்ட திரளான பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்

பின்னர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தற்போதைய ஆட்சியில் கிராமங்கள் தோறும் விளையாட்டு மைதானம் அமைப்பதாக கூறி பணத்தை அவர்களே எடுத்துகொள்வார்கள் இதற்காக தான் கிராமங்கள் தோறும் விளையாட்டு மைதானம் என்று அறிவித்து செயல்படுத்துவதை போல் உள்ளது இதே போல் தான் ஏரிகளை தூர்வாருகிறேன் என்று ஏரி மண்ணை விவசாயிகளை எடுத்துகொள்ள சொன்னார்கள் அவர்களும் எடுத்து சென்றுவிட்டனர் தற்போது தூர்வாரியதாக அதற்கும் இந்த ஆட்சியினர் பில் போட்டு பணத்தை எடுத்துகொண்டனர் லஞ்சத்தை இந்த ஆட்சிதான் அதிகம் செய்கிறது சென்னை புத்தக கண்காட்சியில் லஞ்சம் ஊழல் குறித்து புத்தகம் வைத்ததற்காக தமிழக அரசு சகிப்பு தன்மையில்லாமல் ஜனநாயக நாட்டில் ஊழலே நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவிக்க வேண்டுமென தவிர அதைவிடுத்து பத்திரிகையாளரை கைது செய்வது சர்வாதிகார போக்கு இது நாட்டில் நடக்காத செயலாகும் காங்கிரஸ் எங்கள் கூட்டணியிலிருந்து விலகி போனாலும் போகட்டும் எங்களுக்கு அதனால் நஷ்டமில்லை காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி சென்றாலும் அதைப்பற்றி கவலைப்படபோவதில்லை அவர்களுக்கு ஓட்டே கிடையாது இதனால் எங்களுக்கு எந்த பாதிப்புமில்லை அவர்கள் கூட்டணியை விட்டு போனால் போகட்டும் என்று கூறினார்
திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ் இருக்கிறதா என்பதே சந்தேகமான நிலையில் இருக்கிறது காரணம் திமுக அதைப்பற்றி கவலைப்படவில்லை என்றும் காங்கிரசுக்கு ஓட்டுயில்லை என்றும் கூறியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.