ETV Bharat / state

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பான பல்கலைக்கழகம்.. - Latest News on Vit University

VIT University bomb threat: வேலூரில் உள்ள பிரபல கல்வி நிறுவனமான விஐடி பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

vellore VIT university bomb threat
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 6:41 PM IST

Updated : Dec 14, 2023, 9:35 PM IST

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூர்: காட்பாடி பகுதியில் உலக புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகமான விஐடி பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கக்கூடிய இந்த பல்கலைக்கழகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று (டிச.14) மாலை இந்த பல்கலைக்கழகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகத் தெரிகிறது.

இந்த வெடிகுண்டு மிரட்டலானது, போலீசாரின் 100-கட்டுப்பாட்டு எண்ணிற்குத் தொடர்பு கொண்டும், விஐடி பல்கலைக்கழகத்தின் இ-மெயிலுக்கு தனிப்பட்ட முறையிலும், மர்ம நபர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வேலூர் மாவட்ட காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில், வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார், விஐடி பல்கலைக்கழகத்திற்கு விரைந்து சென்று பல்கலைக்கழகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் 8 குழுக்களாகப் பிரிந்து அலுவலகம், வகுப்பறைகள், மாணவ, மாணவிகளின் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், போலீசார் மற்றும் பல்கலைக்கழகத்தின் தரப்பில், மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலத்த பாதுகாப்பின் கீழ் உள்ள புகழ்பெற்ற விஜடி பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம், வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..!

Last Updated : Dec 14, 2023, 9:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.