நாட்டின் முதல் சுதந்திரப் போராட்டமான வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு நாளையொட்டி இன்று(ஜூலை 10) வேலூரிலுள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிஎம் கேர்ஸ்சின் நோக்கம் என்ன? அதன் வெளிப்படை தன்மை என்ன என்பதை பாஜக கூற வேண்டும். இந்தியா சீனா பிரச்னையில் மோடி அரசு மகத்தான தோல்வியை அடைந்திருக்கிறது.
பாஜாவிற்கு எதிராக சோனியா காந்தி, ராகுல்காந்தி கடுமையாக குற்றச்சாட்டுகளை வைக்கின்ற காரணத்தினால் பாஜாகவினர் தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் அறக்கட்டளைகள் குறித்து பொய்யான அவதூர்களை பரப்பி வருகின்றனர். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டிருந்தால் கரோனா ஏறக்குறைய முடிந்து போயிருக்கும், ஆரம்பத்தில் தொற்று பாதிப்பில், 2 ஆம் இடத்தில் இருந்த கேரளா இன்றைக்கு தொற்று இல்லா மாநிலமாக உள்ளது.
ஆகவே தமிழ்நாடு அரசு கரோனா தடுப்பில் சுமாராகக்கூட செயல்படவில்லை" என்றார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: மத்திய சுகாதாரக் குழுவினர் முதலமைச்சருடன் ஆலோசனை