வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம்(43). இவர் ஆட்டோ ஓட்டும் வேலை செய்துவந்தார். இந்த நிலையில் இன்று ஜீவானந்தம் தனது ஆட்டோவில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வள்ளலார் மேம்பாலத்தை கடந்து வேலூர் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது சாலையோரம் நின்றிருந்த மினி வேனை கவனிக்காமல் ஜீவானந்தம் மின்னல் வேகத்தில் அதன் மீது மோதியுள்ளார். இதில் ஜீவானந்தம் பலத்த காயம் அடைந்தார். அவரது ஆட்டோவும் கடும் சேதமடைந்தது. சம்பவத்தின்போது அருகே இருந்தவர்கள் அளித்த தகவல் மூலமாக அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஜீவானந்தத்தை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக ஜீவானந்தத்தின் உடல் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக சத்துவாச்சாரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சென்னையை சேர்ந்த மினி வேன் டிரைவர் நாகலிங்கத்திடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : பிரசவ கால இறப்பு விகிதம் அதிகரிப்பு - டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு