தமிழ்நாட்டில் ஆங்கில புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குறிப்பாக மாநகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து பரபரப்பாக காணப்படும். கரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் இருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் மூலம் கரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் நட்சத்திர விடுதிகள், கேளிக்கைமன்றங்கள் மற்றும் வாகனங்களில் இரவு நேரங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மது அருந்தி வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கைக்கு மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் எச்சரித்திருந்தனர்.
அதன் ஒரு பகுதியாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை கண்கானிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 3 ஆயிரம் காவல்துறையினர் நேற்று (டிச.31) இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாகன சோதனையில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது, பைக் ரேஸ் சென்றது என மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மது அருந்தி வாகம் ஒட்டுதல், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்கள் என 400 பேர் மீதுவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: புத்தாண்டு தினத்தில் ஏழைகளுக்கு விலையில்லா உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்!