ETV Bharat / state

வேலூர் பொற்கொடி அம்மன் கோவில் திருவிழா- மிளகாய் தூவி வழிபாடு - மிளகாயை அம்மன் மீது தூவி வழிபாடு

வேலூர், வேலங்காடு கிராமத்தில் பொற்கொடி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. பொதுமக்கள் தங்களுடைய வேண்டுதலுக்காக கிடா வெட்டி, உப்பு ,மிளகு ,மிளகாயை அம்மன் மீது தூவி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

வேலூர் பொற்கொடி அம்மன் கோவில் திருவிழா- மிளகாய் தூவி வழிபாடு

author img

By

Published : May 11, 2022, 7:59 PM IST

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே வேலங்காடு கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பொற்கொடி அம்மன் கோவில் திருவிழா இன்று (மே11) காலை முதல் மாலை வரை வெகு விமர்சையாக நடைபெற்றது. பொற்கொடி அம்மனை வேலங்காடு கிராமத்தில் அலங்கரிக்கப்பட்டு வேலங்காடு வழியாக எடுத்து வரப்பட்டபோது பொதுமக்கள் தங்களுடைய வேண்டுதலுக்காக கிடா வெட்டி, உப்பு ,மிளகு ,மிளகாயை அம்மன் மீது தூவி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் அம்மனின் அலங்காரத்தை தோளில் சுமந்து கொண்டு ஏரியில் அமர்ந்துள்ள பொற்கொடி அம்மன் கோவில் அருகே வந்தபோது அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா என அம்மனை வழிபட்டனர்.

வேலூர் பொற்கொடி அம்மன் கோவில் திருவிழா- மிளகாய் தூவி வழிபாடு
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியிருக்கும் இந்த திருவிழாவில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பட்டியல் இனத்தவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.