ETV Bharat / state

திடீர் வாகன தணிக்கையில் 700 பேர் மீது வழக்குப்பதிவு - காவல் துறை அதிரடி! - கட்பாடி போலீஸ் சிறப்பு வாகன சோதனை

வேலூர்: திடீரென வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல் துறையினர் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Police Special Vehicle Vheckup வேலூர் போலீஸ் சிறப்பு வாகன சோதனை கட்பாடி போலீஸ் சிறப்பு வாகன சோதனை போலீஸ் சிறப்பு வாகன சோதனை
Vellore Police Special Vehicle Vheckup
author img

By

Published : Mar 5, 2020, 7:51 PM IST

வேலூர் மாவட்டத்தில், சாலை விபத்துகளை தடுப்பதற்காக மாவட்ட காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காட்பாடி சாலையில் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் இன்று திடீரென சிறப்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, சாலையின் நான்கு புறமும் நின்று கொண்டிருந்த காவலர்கள் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்தனர். அதேபோல் காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்ளையும் பிடித்து அபராதம் விதித்தனர். அந்த அபராதத் தொகையை நவீன கையடக்க கருவி மூலம் வசூலித்தனர்.

இதைத் தொடர்ந்து, தலைக்கவசம் வைத்துக்கொண்டு அணியாமல் வந்த நபர்களுக்கு காவலர்கள் தலைக்கவசத்தை அணிந்து விட்டனர். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தலைக்கவசம் அணியாமல் வந்த அனைவரையும் காவல் துறையினர் வழிமறித்து 100 ரூபாய் அபராதம் விதித்தனர்.

வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட காவல் துறையினர்

பின்னர் துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் தலைக்கவசம் அணிவதன் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த வாகனத் தணிக்கையில் தலைக்கவசம் அணியாதது, சீட் பெல்ட் அணியாதது ஆகியவற்றின் கீழ் 692 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆறாவது முறையாக மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.