ETV Bharat / state

வேலூரில் 171 பேர் மீது அதிரடி வழக்குப் பதிவு! - வேலூர் காவல்துறை

வேலூர்: குற்றவாளிகளைப் பிடிக்கத் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற திடீர் ஆப்ரேஷனில் 171 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Vellore police
author img

By

Published : Oct 3, 2019, 9:57 PM IST

இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், " வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் 2ஆம் தேதி வரை இந்த ஆப்ரேஷன் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் 2,859 இடங்களில் நடைபெற்ற வாகன தணிக்கையில் 15,975 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது."

மேலும், "முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் கீழ் 171 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 109, 110 கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 41(1) பிரிவின்கீழ் 1,160 நபர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது

"சந்தேகப்படும்படியான பொருட்கள் பொது இடங்களில் காணப்பட்டால் அதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தர வேண்டும் என்பதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது" எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: செல்ஃபியால் நேர்ந்த விபரீதம் - உயிரிழந்த இன்ஜினியரிங் மாணவர்!

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் குற்றவாளிகளை பிடிக்க துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற திடீர் ஆப்ரேஷன் - 171 பேர் மீது வழக்குப்பதிவு.
Body:வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், " வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கடந்த 26ம் தேதி முதல் 2ம் தேதி வரை நடைபெற்றது இதில் மாவட்டம் முழுவதும் 2859 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்று 15975 மோட்டார் வாகன வழக்குகளும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் கீழ் 171 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 109, 110 கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் 41(1) பிரிவின்கீழ் 1160 நபர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர் மாவட்டம் முழுவதும் உள்ள தங்கும் விடுதிகளில் அந்தந்த துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சந்தேகப்படும்படியாக யாரும் தங்கி உள்ளார்களா என்பதை திடீர் சோதனை மேற்கொண்டனர் முக்கியமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பேருந்து நிலையம் ரயில் நிலையம் கோயில்கள் மற்றும் பொது இடங்களில் வெடிகுண்டு அகற்றல் பிரிவு மற்றும் மோப்ப நாய் பிரிவு கொண்டு சோதனை செய்யப்பட்டது. சந்தேகபடும்படியான பொருட்கள் பொது இடங்களில் காணப்பட்டால் இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தர வேண்டும் என்பதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது" என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.