ETV Bharat / state

காட்டுக்குள் விதைப் பைகளை வீசிய மழலைகள் - வேலூர் செய்திகள்

வேலூர் : குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் பூமலை வனப்பகுதிக்குள் விதைப் பைகளை வீசினர் .

childrens day
author img

By

Published : Nov 14, 2019, 11:54 PM IST

வேலூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம் பள்ளிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று குழந்தைகள் தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு ரோஜாப்பூ, இனிப்புகளைக் கொடுத்து தலைமையாசிரியர் சேகர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்பளித்தனர்.

மாணவர்கள் ரோஜாப்பூவை சட்டையில் அணிந்துகொண்டனர். பிரார்த்தனை கூட்டத்தில் ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதையடுத்து இயற்கை, மழையின் அவசியத்தை மாணவர்களுக்கு இளம் வயதிலேயே உணர்த்தும் பொருட்டு பள்ளிக்கு அருகே உள்ள பூமலை வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை சார்பில் கொண்டுவரப்பட்ட 500 விதைப் பைகள் மாணவர்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டது. பின்னர், வட்டார கல்லி அலுவலர் கதிரவன், மாதனூர் தோட்டக்கலை உதவி அலுவலர் மோனிஷ் முன்னிலையில் ஒரு ஓடையை சுற்றி விதைப் பைகளை மாணவர்கள் ஆர்வத்துடன் வீசினர்.

மீண்டும் பள்ளி திரும்பிய மாணவர்களுக்கு தடபுடலாக உணவு வழங்கப்பட்டது. இதனை ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஏழுமலையானைத் தரிசித்து திருமண நாளை கொண்டாடிய ரன்வீர் - தீபிகா ஜோடி!

Intro:அரசு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா....

500 விதைப் பந்துகளை வனப்பகுதியில் வீசிய மாணவர்கள்....

மாணவர்களுக்கு அசைவத்துடன் கூடிய அறுசுவை உணவு வழங்கிய ஆசிரியர்கள்....

Body:
வேலூர் மாவட்டம்

மாதனூர் ஒன்றியம் பள்ளிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு ரோஜாப்பூ, இனிப்புகளைக் கொடுத்து தலைமையாசிரியர் சேகர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர். மாணவர்கள் ரோஜாப்பூவை சட்டையில் அணிந்துகொண்டனர். பிராத்தனைக் கூட்டத்தில் ஜவகர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. தமிழ்நாடு தோட்டக்கலை துறையின் சார்பில் 500 விதைப் பந்துகள் பெறப்பட்டு இயற்கையின் அவசியத்தையும் மழையின் அவசியத்தையும் மாணவர்களுக்கு இளம் வயதிலேயே வலியுறுத்தும் பொருட்டு அருகில் உள்ள பூமலை வனப்பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் சென்று மாதனூர் வட்டாரக் கல்வி அலுவலர் கதிரவன் மற்றும் மாதனூர் தோட்டக்கலை உதவி அலுவலர் மோனிஷ் ஆகியோர் முன்னிலையில் விதைப்பந்துகளை வனப்பகுதியையொட்டியுள்ள ஓடையை சுற்றிலும் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் வீசினர். மரங்கள் வளர்ப்பதால் மழை பெருகும் என்று விளக்கி கூறப்பட்டது. மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு அசைவ உணவுடன் கூடிய அறுசுவை உணவை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் செய்து வழங்கினர். மாதனூர் வட்டாரக் கல்வி அலுவலர் திருப்பதி மாணவர்களுக்கு அறுசுவை உணவை விநியோகித்தார். இதில் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.