கரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்ட நிர்வாகம் நடத்தும் கரோனா இலவச தடுப்பூசி சிறப்பு முகாம் சத்துவாச்சாரி தஞ்சம்மாள் துரைசாமி திருமண மண்டபத்தில் இன்று(ஏப்ரல். 12) நடைபெற்றது.
ஏப்ரல் 18 ஆம் தேதி வரை நடைபெறும் இம்முகாமில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர் மாநகரில் சத்துவாச்சாரி பேஸ் 2, புதிய பேருந்து நிலையம், காட்பாடி ஓடைபிள்ளையார் கோவில், CMC ஆற்காடு ரோடு, பழைய பேருந்து நிலையம், ஓட்டேரி ஆகிய ஆறு இடங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.மேலும் வேலூரில் உள்ள அனைத்து எஸ்பிஐ வங்கி கிளைகளிலும் கரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.
இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருட்டு