வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இதில் தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 2 லட்சத்து 77 ஆயிரத்து 355 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 370 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 14 ஆயிரத்து 143 வாக்குகளும் பெற்றுள்ளனர். மேலும் நோட்டாவிற்கு நான்காயிரத்து 901 வாக்குகள் விழுந்துள்ளது.