ETV Bharat / state

"சவுதி அரேபியாவில் செவிலியராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்" - வேலூர் ஆட்சியர் அழைப்பு! - Employment Office

சவுதி அரேபிய அரசின் கீழ் செவிலியராக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 1:42 PM IST

வேலூர்: சவுதி அரேபிய அரசின் கீழ் செவிலியராக பணிபுரிய தகுதி உடைய பெண் செவிலியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளது. இது குறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த செய்திக் குறிப்பில், "சவுதி அரேபிய அரசின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்ஸி நர்சிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 21 முதல் 37 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது தவிர, டேட்டா ப்ளோவ், ஹெச்.ஆர்.டி சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூபாய் 80 ஆயிரம் முதல் ரூ1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இது மட்டுமில்லாமல் உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டில் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.

மேலும், ஊதியம் மற்றும் பணி விவரங்கள் குறித்த விவரங்களை அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் 95662 39685, 63791 79200, 044 - 22505886, 044 - 22502267 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் பெறலாம். இந்தப் பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பதிவு செய்வதற்கு வசதியாக முகாம் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: "ஆரம்ப சுகாதார நிலையங்களில் கழிப்பறை நீர் வசதியுடன் சுத்தமாக இருக்கிறதா" - தலைமை செயலர் அதிரடி உத்தரவு!

இந்த வேலை வாய்ப்பு முகாம் வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்தவொரு இடைத்தரகரோ, முகவர்களோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக முகாமிற்கு வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடம் இருந்து சேவைக் கட்டணமாக ரூபாய் 35 ஆயிரத்து 400 மட்டும் வசூலிக்கப்படும்” என்று தெரிவித்து உள்ளார். மேலும் “அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை வலைதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

வேலூரில் நடைபெறும் இந்த முகாமிற்கு வர முடியாதவர்கள் தங்களுடைய சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: வேலூர் அரசு பென்ட்லேண்ட் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை - முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.