ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித் தொகைத் திட்டம்... எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? - Latest Education News

PM Education Scheme: பிரதமரின் கல்வி உதவித் தொகைத் திட்டத்தில் பள்ளி மாணவர்கள் பயன்பெறத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித் தொகைத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 10:33 PM IST

வேலூர்: இளம் சாதனையாளர்கள் அவர்களின் கல்விக்கு உதவி மற்றும் ஊக்கம் அளிக்கும் வகையில், பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகைப் பெறப் பள்ளி மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தளத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறத் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது.

2023 - 2024 ஆம் ஆண்டுக்கு https://scholarship.gov.in/public/FAQ/topclassschoollist2211compressed.pdf என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த 3ஆயிரத்து 93 மாணவ, மாணவிகளுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் பெற்றோர் வருமான உச்சவரம்பு ரூபாய் 2.5 லட்சம் ஆகும். மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை 2024 ஜனவரி 15-ஆம் தேதிக்குள் சரிபார்த்துப் பதிவிட வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் புதுப்பிப்பதற்கான இணைப்புக்குச் சென்று கடந்தாண்டில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண், கடவுச்சொல் பதிவு செய்து விண்ணப்பத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தாங்கள் 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

எனவே, 60சதவீதத்திலிருந்து அதற்கும் அதிகமாக 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் புதிய பதிவு என்ற இணைப்பில் சென்று தங்களது விவரங்களைப் பதிவு செய்த பின்னர், பெறப்படும் விண்ணப்ப எண், கடவுச்சொல் பதிவுகளைக் கொண்டு புதிய விண்ணப்பம் என்ற இணைப்பின் கீழ் பதிவு செய்து உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு https://scholarships.gov.in, மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளமான https://socialjustice.gov.in ஆகியவற்றை அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெற்றிடலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "புயல் பாதிப்புகளிலிருந்து வெளிவர மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகிறது" - ராஜ்நாத் சிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.