வேலூர்: வேலூர் நகராட்சி கடந்த 2008 ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது வரை மாநகராட்சியில் மக்கள் தொடர்பு அதிகாரி பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.
மாநகராட்சியின் அறிவிப்புகள், செய்திகளை தெரிந்துக் கொள்வதில் பொதுமக்களும் சிரமம் ஏற்படுகிறது. மாநகராட்சி அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக அழைத்தாலும் முறையாக தகவல் கூறப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தொலைபேசி எண்ணிற்கு ஈடிவி பாரத் செய்தியாளர் தொடர்பு கொண்டபோதும் முறையாக விளக்கம் கொடுக்கப்படவில்லை. பின்னர், மாநகராட்சி ஆணையாளரிடம் பேச தொலைபேசி வாயிலாக அழைத்தபோது அவரும் அழைப்பை எடுக்க வில்லை.
பின்னர், மாநகராட்சி மேயர் சுஜாதாவை அழைத்த போது, ”வேலூர் மாநகராட்சியில் 10 லட்சத்திற்கு மேல் மக்கள்தொகை இருந்தால் மட்டுமே மக்கள் தொடர்பு அதிகாரியை பணி நியமனம் செய்ய முடியும் என்று விளக்கம் அளித்ததோடு, அரசின் 152/2022 அரசாணை உள்ளது” என்று மேற்க்கொள் காட்டினார்.
அரசின் சட்ட திட்ட விதிகள் என்பது மக்களுக்கு சேவை செய்யத்தான் என்பதை உணர்ந்து விரைவில் மக்கள் தொடர்பு அதிகாரியை தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும் என வேலூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:'ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார்'