வேலூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 12) மேலும் 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 14ஆம் தேதிக்கு பிறகு இரண்டாவது நாளாக மாவட்டத்தில் நூறு பேருக்கு கீழாக கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மேலும் மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 864 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 100 பேர் உயிரிழந்தனர். இதுவரை 6 ஆயிரத்து 788 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.