ETV Bharat / state

அறநிலையத் துறை இணை ஆணையர் மாற்றம் - aadhi parasakthi temple

வேலூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை ஆய்வு செய்த வேலூர் அறநிலையத் துறை இணை ஆணையர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

adhi parasakthi
author img

By

Published : Jun 7, 2019, 12:32 PM IST

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது குறித்து ஆய்வு செய்ய வேலூர் அறநிலையத் துறை இணை ஆணையர் தனபால் உத்தரவிட்டார். இதற்காக காஞ்சிபுரம் அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து மேல்மருவத்தூர் கோயிலில் அறநிலையத் துறையின் உத்தரவை ஊழியர்களிடம் காண்பித்து அலுவலர்கள் ஆய்வு செய்ய முயன்றனர். ஆனால் ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், ஆய்வு செய்ய வந்த அலுவலர்களை கோயிலிலிருந்தும் வெளியேற்றினர். இதனால் ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி உதவி ஆணையர் ரமணி மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

இந்நிலையில், ஆதிபராசக்தி கோயிலை ஆய்வு செய்ய உத்தரவிட்ட அறநிலையத் துறை இணை ஆணையர் தனபாலை பணியிட மாற்றம் செய்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. தனபால், தற்போது சிவகங்கை அறநிலையத் துறை இணை ஆணையராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் விழுப்புரம் இணை ஆணையர் செந்தில்வேலவன், வேலூர் இணை ஆணையரின் அனைத்து பொறுப்புகளையும் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆய்வு செய்த விவகாரம் வேலூர் அறநிலையத் துறை இணை ஆணையர் அதிரடி மாற்றம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் உத்தரவிட்டார். இதற்காக காஞ்சிபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில் 4 பேர் குழு அமைக்கப்பட்டது. இதை மேல்மருவத்தூர் கோவிலில் அறநிலையத்துறையின் உத்தரவு நகலை கோவில் ஊழியர்களிடம் காண்பித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய முயன்ற போது, கோவிலில் இருந்த ஊழியர்கள் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை கோவிலில் இருந்து வெளியேற்றினர். இதனால் அதிகாரிகளால் கோவிலில் ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதுபற்றி உதவி ஆணையர் ரமணி மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆதிபராசக்தி கோயிஒலை ஆய்வு செய்ய உத்தரவிட்ட அதிகாஅரி தனபாலை பணியிடை மாற்றம் செய்து இந்து  சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. வேலூர் இணை ஆணையராக இருந்த தனபால் , சிவகங்கை இணை ஆணையராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் இணை ஆணையர் செந்தில்வேலவன், வேலூர் இணை ஆணையரின் அனைத்து பொறுப்புகளையும் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.