வேலூர் மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 242 கிராம ஊராட்சி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு நகராட்சி, திருவலம், பள்ளிகொண்டா, பென்னாத்தூர் ஆகிய பேரூராட்சிகள் அடங்கிய உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச் சாவடி வரைவுப் பட்டியலை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முக சுந்தரம் வெளியிட்டார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டதால் வாக்கச்சாவடிகள் குறைக்கப்பட்டும் மாற்றியும் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த வாக்குச்சாவடி வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளிப் படிப்புக்குப் பின்னர் என்ன படிக்கலாம்? - மாணவர்களுக்கு வழிகாட்டிய மாநகராட்சி