ETV Bharat / state

ரெடியான வேலூர் விமான நிலையம்..! இந்த ஆண்டிற்குள் விமான சேவை துவக்கம்..!

Vellore Airport: மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வரும், வேலூர் விமான நிலையத்தில் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் விமானங்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Vellore Airport operation will start in this year which developed under the UDAN project
வெற்றிகரமாக நடைபெற்ற விமான சோதனையோட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 10:37 PM IST

வேலூரில் வெற்றிகரமாக நடைபெற்ற விமான சோதனையோட்டம்

வேலூர்: மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையத்தை சீரமைக்கும் பணிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. வேலூர் விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கு 20 பயணிகள் பயணம் செய்யக்கூடிய சிறியரக விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் உதான் திட்டம் குறித்து CIA அறிக்கையில் வெளியான தகவல்கள் நாட்டு மக்களிடம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வேலூர் விமான நிலையத்திலிருந்து கூடிய விரைவில் விமான சேவைகள் தொடங்கும் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

அதிகாரிகளின் அறிவிப்புப்படி, விமான நிலையத்தைச் சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, வேலூர் விமான நிலையத்தில், 850 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளப்பாதை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான முனையம், சரக்கு முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் கோபுரம், நிலைய அலுவலகம், பயணிகள் காத்திருக்கும் அறைகள் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இந்தப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து விமானங்களின் சேவைக்கு நிலவும் பல்வேறு இடையூறுகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் விமானங்கள் பறப்பதற்கும், தரையிறங்குவதற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், 25 அடி உயரத்துக்கும் மேல் உள்ள கட்டிடங்கள், மரங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டதுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனால், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 10 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மற்றும் இந்த ஆண்டிற்குள் விமான சேவைகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி விமான ஓடு தளப்பாதையின் அருகே விமானங்கள் இறங்குவதற்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் பகல் நேரங்களிலும் சரியாக எரிகிறதா என்றும், விமானத்தில் இருந்து தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடையேயான தொடர்பு மற்றும் சிக்னல் கோபுரத்திலிருந்து முறையாக சிக்னல் கிடைக்கிறதா என்றும் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

சோதனை ஓட்டத்திற்காக விமான போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு சொந்தமான விமானம் புதுடெல்லியில் இருந்து சென்னை வழியாக வேலூருக்கு வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து 5 முறை நடைபெற்ற இந்த சோதனை ஓட்டத்தில் விமானம் தாழ்வாகவே இயக்கப்பட்டது. இதனை புதுடெல்லியை சேர்ந்த விமானங்கள் ஆய்வு பிரிவை சேர்ந்த 3 பேர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாதுகாப்பு நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் ஆகியவை விமான நிலைய ஓடுதளம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “அப்துல்லாபுரம் விமானநிலையத்தில் சிக்னல், மின்விளக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்து விமானம் இயக்கி சோதனை செய்யப்பட்டது. முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்டமாக விமான ஓடுதள பாதையில் விமானத்தை இறக்கி சோதனை செய்ய உள்ளோம். விமானம் இயங்குவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். விரைவில் அனுமதி கிடைத்து விடும். வேலூரில் இருந்து வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் விமான சேவைகள் தொடங்கப்படும்" என்று உறுதியளித்தனர்.

இதையும் படிங்க: 12,402 இடைநிலை ஆசிரியர்கள் 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி பள்ளி செல்லாமல் புறக்கணிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.