ஆம்பூர் அடுத்த மின்னூர், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திக்கு விரைந்த வந்த ஆம்பூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குஜராத்தில் சிலிண்டர் லாரி வெடித்து பள்ளி பேருந்து விபத்து