ETV Bharat / state

கங்குவா: பணத்தை டெபாசிட் செய்யாமல் படத்தை வெளியிடக்கூடாது - ஐகோர்ட் உத்தரவு!

ப்யூயல் டெக்னாலஜி என்ற நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ஒரு கோடியே 60 லட்ச ரூபாயை நீதிமன்ற பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்யாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Kanguva theatrical release issue  Madras High Court
கங்குவா போஸ்டர், சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - Actor Surya X page and ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2024, 2:33 PM IST

சென்னை: நடிகர் சூர்யா நடித்து வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' உள்ளிட்ட 3 திரைப்படங்களின் இந்தி டப்பிங் உரிமையை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து 6 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு சென்னையைச் சேர்ந்த ப்யூயல் டெக்னாலஜி என்ற நிறுவனம் வாங்கியிருந்தது.

ஒப்பந்தத்தின் படி, இரண்டு படங்கள் இந்தியில் தயாரிக்கபடாததால் 5 கோடி ரூபாயை ப்யூயல் டெக்னாலஜி நிறுவனத்துக்கு திருப்பி செலுத்திய நிலையில், மீதமுள்ள 1 கோடியே 60 லட்சம் ரூபாயை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் திரும்ப வழங்கவில்லை. அதனால், இந்த தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.11 கோடியாக திருப்பி வழங்காமல், கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ப்யூயல் டெக்னாலஜி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வக்கீல் விஜயன் சுப்ரமணியன், இத்தனை ஆண்டுகள் காத்திருந்துவிட்டு, நாளை மறுநாள் (நவ.14) படம் வெளியாக உள்ள நிலையில் இந்த வழக்கு அவசரகதியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ப்யூயல் டெக்னாலஜி நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய அசல் தொகையான 1 கோடியே 60 லட்சம் ரூபாயை சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, பணத்தை டெபாசிட் செய்யாமல் படத்தை வெளியிடக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே, அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவருக்கு செலுத்த வேண்டிய 20 கோடி ரூபாயை நீதிமன்றத்துக்கு செலுத்தும் வரை கங்குவா படத்தை திரையிடக் கூடாது என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "20 கோடி செலுத்தாமல் 'கங்குவா' படத்தை வெளியிடக் கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.