வேலூர் மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேலூர் மாநகரப் பகுதிகளைப் பொறுத்தவரை 21 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இவர்கள் வசிக்கும் பகுதிகளான கஸ்பா, ஆர்.என்.பாளையம், கொணவட்டம், சைதாப்பேட்டை, சின்ன அல்லாபுரம், காட்பாடி, கருகம்புத்தூர், பாபுராவ் தெரு ஆகிய பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குக் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தன.
இந்நிலையில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியதாலும், கடந்த 28 நாள்களுக்கு மேலாக அந்த பகுதிகளில் புதியதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பதாலும் பாபுராவ் தெரு தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளிலும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தடைசெய்யப்பட்ட பகுதிகளில் போடப்பட்டுள்ள தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழுக்களின் பணிகள் என்ன?