வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அடுத்த கந்தநேரி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு டீசல் நிரப்புவதற்கு சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி விங்ஸ் (காற்றாலை இறக்கை) ஏற்றிச்சென்ற லாரி இன்று அதிகாலை 5 மணி அளவில் சென்றுள்ளது.
இந்த லாரியை தென்காசியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஓட்டியுள்ளார். லாரி பெட்ரோல் பங்கு உள்ளே செல்லும் போது காற்றாலை இறக்கையின் மீது பின்னே வந்த கண்டெய்னர் லாரி அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் கோவை ஓமலூரை சேர்ந்த கண்டெய்னர் ஓட்டுநர் பால்ராஜ் மற்றும் கிளீனர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். இந்த விபத்தால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: VIDEO; கோழியை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு