ETV Bharat / state

அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து ரயில் மறியல்! - vck protest in arakkonam

வேலூர்: வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து விசிக-வினர் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

vck Protest against the demolition of Ambedkar statue
author img

By

Published : Aug 27, 2019, 6:22 AM IST

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருசமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலின்போது, ஒருதரப்பினர் வேதாரண்யம் காவல் நிலையம் அருகில் இருந்த அம்பேத்கர் சிலையை உடைத்தனர். இதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விசிக-வினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

ரயில் மறியல்

இந்நிலையில் வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் விசிக-வினர் சாலை மறியலில் ஈடுபட்டு சிலை உடைப்பில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர் . மேலும், அரக்கோணம் ரயில் நிலையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் விசிகவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Intro:அம்பேத்கர் சிலை உடைப்பு கண்டித்து அரக்கோணத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைதுBody:நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வேதாரண்யம் காவல் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டது இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் அந்த வகையில் வேலூர் மாவட்டம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆங்காங்கே சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் அதன்படி வேலூர் ஆற்காடு ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்து அழைத்துச் சென்றனர் தொடர்த்து வேறு சிலர் அங்கு ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.